Posts

திருக்குறள் ஒரு பார்வை

திருக்குறளைப் பற்றி புதிதாகச் சொல்வதற்கு என்ன இருக்கிறது என்று நினைத்தாலும் 1330 குறள்களுக்கும் விளக்கம் தெரிந்தவர் சிலரே. மொத்தமாக 100 குறளுக்குப் பொருள் தெரிந்திருந்தால் அதுவே பெரிய விஷயம்தான்.  பணியின் நிமித்தம் திருக்குறள் புத்தகத்தை உருவாக்க வேண்டியிருந்தது. திருக்குறளை முழுதாக அறிநதுகொள்ள கிடைத்த அற்புத வாய்ப்பு.   துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்   துப்பாய தூவும் மழை   என்ற குறளைப் பள்ளியில் மனப்பாடப் பாட்டாகப் படிக்கும்போது, தூ தூ என்று சொல்லி மனனம் செய்து வந்தாயிற்று. ஆனால் துப்பார்க்கு என்றால் என்ன என்ற பொருள் நினைவில் இல்லை.  உண்பவர்க்குத் தக்க உணவுப்பொருளை விளைவித்துத் தந்து, பருகுவார்க்கு தானும் ஒரு உணவாக இருப்பது மழை என்பது இதன் பொருள். (ஆனால், பத்தாம் வகுப்பு படிக்கும் பிள்ளை, துப்பு என்னும் ஒரு சொல், உண்ணுதல், உண்ணும் பொருள், விளை பொருள், பருகுதல் போன்ற பல பொருளைத் தருவதால், இது சொல் பின்வருநிலையணி என்று அழகாகச் சொல்கிறாள்.)   பாரதிதாசன் சொல்வது போல் கோயில் என்ற சொல் திருக்குறளில் இல்லைதான். ஆனால் எடுத்ததுமே கடவுளைப் 10 குறள்களால் போற்றிவிட்டுத்தானே வள

சிறுகதை - வம்சம்

சிறுகதை :  வம்சம்  எழுதியவர்- ஜெயம் ஷீலாசிவக்குமார்  கோவிலில் ஆடிமாதக் கூட்டம் அலைமோதியது. பிள்ளை இல்லாத தம்பதிகளின் நம்பிக்கையாய் பல தொட்டில்கள் அந்த கோவிலின் மரக்கிளைகளில் கட்டப்பட்டிருந்தன. காற்றில் ஆடிக்கொண்ருந்த தொட்டில்கள் அதனைக் கட்டிய பெண்களின் மனம் பட்ட பாடுகளை கூறிக்கொண்ருப்பது போல் சுகுமாருக்குப் பட்டது.  ‘‘சுகுமாரு! உன் பொண்டாட்டியைக் கூட்டிக்கிட்டு வா!’’ என்று கட்டளையிட்ட அம்மாவைத் தயக்கமாய் பார்த்தான். அவளது ஒரு கையில் மஞ்சளில் நனைக்கப்பட்ட துணி இருந்தது. மற்றொரு கையில் ஒரு சிறிய கல். சுகுமாருக்கு திக்கென்றிருந்தது. கேள்விக்குறியாய் அம்மாவைப் பார்த்தான். " நம்ம குல தெய்வம் செல்லியம்மனை நெனைச்சி இந்தத் தொட்டிலைக் கட்டுங்க. அடுத்த தடவை கண்டிப்பா பையன் பொறக்கும்.’’ - முகம் மலர சொன்னாள் அம்மா.  என் இரண்டு பெண் குழந்தைகள் போலவே, குலதெய்வம் நீலியம்மன், தன் சகோதரி செல்லியம்மனோடு வீற்றிருக்கிறாள். கொள்ளை அழகோடும், அறிவோடும் இரண்டு பெண் குழந்தைகள் இருக்க- மூன்றாவதாய் பையன் வேண்டும் என்று கேட்பதை நீலிதான் எப்படிப் பொறுத்துக்கொள்வாள்?  கோவில் வாசலில் மனைவி கவிதா, சின்ன மகளை மடி

சிறுகதை - சரிநிகர்

சிறுகதை - சரிநிகர்  எழுதியவர் - ஜெயம் ஷீலாசிவக்குமார் நன்றி: ராணி முத்து '(2015) இதுங்களுக்கு வேற வேலையில்லை. போ.. போ..' என்ற குரலைக் கேட்ட பிரவீன் திரும்பிப் பார்த்தான். கடையின் முன்பாக நின்றிற்கும் தன்னைத்தான் சொல்கிறாரோ கடைக்காரர் என்ற சந்தேகம் வந்தது. இரண்டு அடி முன்னால் தள்ளி நின்றபோது, கடைவாசலின் முன்பாக கையேந்தி நின்றபடி இருந்த அந்தக் குழந்தைகள் தெரிந்தார்கள். ஐந்து வயதுள்ள இரண்டு குழந்தைகள். அப்போதுதான் 'ததக்குப் புதக்கு' என்று நடக்க ஆரம்பித்திருந்த ஒரு ஆண் குழந்தை. பெண் பிள்ளைகள் இருவரும் நிறம் மங்கிப்போன கவுன் போட்டிருந்தார்கள். அந்த குட்டிப் பையன் பொத்தான் இல்லாத ஒரு சட்டையை மட்டும் மாட்டியிருந்தான்.  கடைக்காரர்'டீ'யை ஆற்றி உள்ளே பேப்பர் படித்தபடி இருந்த ஒரு பெரியவருக்குக் கொடுத்துக்கொண்டிருந்தார். 'அட போன்னு சொல்றனில்ல? காலங்கார்த்தால வந்த ஏன் உசுர எடுக்கிறீங்க?' கடைக்காரர் கடுகடுத்த முகத்துடன் அந்தக் குழந்தைகளை கண்டித்தார்.  உள்ளே கதை பேசியபடி தங்கள் டம்ளரில் இருந்த டீயையே காஃபியையோ உறிஞ்சிக்கொண்டிருந்த நாலைந்து பேர்களும் அந்தக் குழந்தை

கவிதை - மழைத்துளி

சிறிய மழைத்துளிதான் என்றாலும் பளிங்கு போல் பிரகாசித்தபடி மண்ணில் விழுந்தேன் அத்தனைத் துளிகளிலும் அசாதாரணத் துளி நானென்று எண்ணி மகிழ்ந்தேன் பாறையை ஒதுக்கி சாலையை தவிர்த்து களிமண்ணை நிராகரித்து செம்மண்ணில் விழுந்தேன் செழித்து வளர்வேனென்று செம்மண் சேறாகி  கால்வாயில் தள்ளப்பட்டு  நதியில் விழுந்த போது விழித்துக்கொண்டேன் தனித்துளி நானென  ஆர்ப்பரித்து எழுந்தேன்  கண்டுபிடி உன்னை என்று கண்ணாமூச்சி ஆடிய நதி  கடலில் கலந்தது என்னை தேடித் தேடிப் பார்த்தேன்  கண்டுபிடிக்கவே முடியவில்லை  தொலைந்துபோன என்னை வழிந்த கண்ணீரிலும்  எத்துளி எனதென்று அடையாளம் தெரியவில்லை  கடலின் ஒவ்வொரு துளியும்  தொலைந்து போன  தன்னை காணாமல் அழுது கொண்டிருந்தது  என்னை போலவே - தியானி